BREAKING NEWS

ads

Showing posts with label REMEMBRANCE OF KALAM. Show all posts
Showing posts with label REMEMBRANCE OF KALAM. Show all posts

Thursday, 30 July 2015

some precious pics of kalam











































கனவு கண்டது மணிப்பூர் கிராமம் நனவாக்கினார் அப்துல் கலாம்!

கனவு கண்டது மணிப்பூர் கிராமம் நனவாக்கினார் அப்துல் கலாம்!
அக்டோபர் 15-ம் தேதி இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஆவுல் ஃபக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் மரைக்காயர் என்ற மாமனிதரின் பிறந்த நாள். அதுவும் இந்த ஆண்டு அவர் 80வது வயதை நிறைவு செய்கிறார்.
அவரது பிறந்த நாளுக்கு மறுநாளான அக்டோபர் 16-ம் தேதியை "கலாம் தினம்' என்று ஒரு கிராமமே சீரும் சிறப்புமாகக் கொண்டாடுகிறது. மணிப்பூர் மாநிலத்தின் பங்லோன் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோலாகலத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களோ வேறு எந்த உயர் தலைவர்களோ இப்படி ஒரு கிராமத்துக்குச் சென்றிருப்பார்களோ, கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை.
பெயரில் மட்டும் குடியரசுத் தலைவராக இல்லாமல் மக்களின் மனதிலும் தலைவராகவே இன்றும் குடிகொண்டுள்ள அப்துல் கலாம், மணிப்பூர் கிராமத்தில் ஒரு சாதாரண பள்ளித் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று, வாக்குத் தவறாமல் அந்தக் கிராமத்துக்குச் சென்று பள்ளி மாணவர்களுடன் கலந்து பேசியிருக்கிறார்.
அப்துல் கலாம் அந்த கிராமத்துக்கு வருகை புரிந்துவிட்டு திரும்பியது கூடப் பெரிதல்ல. அக்கிராமத்தின் பள்ளி மாணவர்களுக்காக கணினிகளை தனது அலுவலகம் மூலம் நேரடியாகவே வழங்கி, அந்தக் கிராமத்துச் சிறுவர்களுக்காக அறிவுலகத்தின் கதவுகளையே திறந்து வைத்திருக்கிறார்.
மணிப்பூரின் ஒதுக்கப்பட்ட மலைப் பகுதி கிராமம் பங்லன். அங்குள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கின் காங்டே. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தனது பள்ளியின் பொன்விழாவுக்கு அழைக்கத் திட்டமிட்டு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
2006-ம் ஆண்டு ஏப்ரலில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் அளிக்கப்பட்டது. சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது காங்டே கூறினார்:
""கம்ப்யூட்டர் உலகமான சிலிக்கான் வேலியில் கிறிஸ்தோபரைவிட கிருஷ்ணமூர்த்தி இன்று பிரபலமாகிவிட்டார். ஆனால், இந்தியாவின் பழங்குடியினர் பலர் கணினி என்பதைப் பார்த்தறியாதவர்கள். அதனால்தான், வடகிழக்கு மாநிலத்துக்கு அழைக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து தனது பள்ளியின் பொன்விழாவுக்கு காங்டே விடுத்த அழைப்பை ஏற்க இயலாத நிலையைப் பக்குவமாக உணர்த்திய அப்துல் கலாம், ""மணிப்பூர் மாநிலத்துக்கு அலுவலாக வரும்போது நிச்சயம் உங்கள் கிராமப் பள்ளிக்கு வருவேன்'' என்றார்.
பள்ளிக்கு வருவேன் என்று சொன்னதை அதே ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றினார் கலாம். அது மட்டுமா? பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தராத வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளார் அவர். மணிப்பூர் உள்பட பல வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிலைமையை உணர்த்தும் வகையில் நாங்கள் கூறியதை மெüனமாகக் கேட்டுக் கொண்டார் அப்துல் கலாம்.
மணிப்பூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அக்டோபரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவராக உள்ளவர்தான் அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்பதால், அதில் பங்கேற்றார். அவரது நிகழ்ச்சி நிரலில் இன்னொரு நிகழ்ச்சி மட்டும் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் மிஜோரம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
தான் ஏற்கெனவே மணிப்பூர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்துக் கொண்ட கலாம், நிகழ்ச்சியில் பங்லன் கிராமப் பள்ளி நிகழ்ச்சியையும் இணைக்க உத்தரவிட்டார்.
பல காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த அந்த கிராமம்,திடீரென்று புதிய மின் இணைப்பு பெற்றது. புதிய டிரான்ஸ்பார்மர்கள் வரவழைக்கப்பட்டன. கிராமத்தை எட்டிப் பார்க்காத அதிகாரிகள் இரவு பகலென்று அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர். பல ஆண்டுகள் பூசப்படாத பள்ளியின் சுவருக்கு வெள்ளையடிக்கப்பட்டது. அதே சமயம் சில இயக்கத்தினர் அந்த மாநிலத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தினர். "நிலைமை இப்படி ஆகிவிட்டதே, கலாம் வருவாரா?' என்ற கவலை பங்லன் பள்ளித் தலைமை ஆசிரியர் காங்டேவுக்குக் கவலை.

ஆனால் சொன்னது கலாம் ஆயிற்றே!
சொன்னபடி வந்தார், அந்தப் பள்ளியைச் சுற்றிப் பார்த்தார், அவர்கள் அளித்த விருந்தோம்பலை, வரவேற்பை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் நிற்காமல், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நேரடியாக அந்தப் பளளிக்கு கம்ப்யூட்டர் மையம் அமைக்கவும், புதிய கட்டடம் கட்டவும், கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான இதர உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்தார்.
குறுகிய காலத்தில் அவையெல்லாமே நிறைவேறின.
""எங்கள் பள்ளியில் கணினி மையத்தை அமைத்து கணினிகளை வழங்கினார். அறிவியல் ஆய்வகத்தையும் அமைத்துத் தந்தார். இன்று, எங்கள் கிராமத்தில் பலர் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் காங்டே.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வாழும் அந்தக் கிராமத்தில் தனது முத்திரையைப் பதித்த கலாமுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது பிறந்தநாளை அடுத்த அக்டோபர் 16-ம் தேதியை அந்தப் பள்ளி "கலாம் தினம்' என்று கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. அதில் கிராமத்தினர் அனைவரும் பங்கேற்று கலாமுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம் போயிருக்குமே!’ என்பார்.
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
முதலாவதாக, பஞ்சாபில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி மிகவும் கவலையுடன் இருந்தார் டாக்டர் கலாம். அப்பாவி உயிர்கள் பலியானது அவருக்கு பெரும் வேதனையை அளித்திருக்கிறது. ஷில்லாங் ஐஐஎம்மில் அவர் பேசவேண்டிய தலைப்பு ‘Creating a Livable Planet Earth’. இதனுடன் பஞ்சாப் சம்பவத்தை இணைத்து என்னுடன் பேசினார். ‘பொல்யூஷனைவிட மனிதர்களின் வேலைகள்தான் இந்த உலகுக்கு பெரிய அச்சுறுத்தல்’ என்றார்.
'வன்முறை, மாசு, மனிதர்களின் பொறுப்பில்லாத நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்தால் நாம் உலகைவிட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டியதுதான்...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தோம். ‘இப்படியே போனால் 30 வருடங்கள்தான். இளைஞர்களாகிய நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும். இது உங்களுடைய எதிர்கால உலகம் இல்லையா?’ என்றார் கலாம்.
இரண்டாவது. கடந்த 2 நாட்களாகவே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாம் கவலையாக இருந்தார். ‘நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது 2 முறை ஆட்சிகள் மாறியது. பதவியில் இல்லாதபோதும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பாராளுமன்றம் செயலிழந்துதான் இருக்கிறது. இது சரியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் பாராளுமன்றத்தில் நடைபெற வேண்டும். இதற்கான வழியை நான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.
உடனே, என்னை ஷில்லாங் ஐஐஎம் மாணவர்களுக்காக, சர்ப்ரைஸாக ஒரு அசைன்மென்ட் கேள்வியைத் தயார் செய்யச் சொன்னார். இந்தக் கேள்வியை தன்னுடைய உரை முடித்தபின்தான் கலாம் மாணவர்களுக்கு சொல்வதாக இருந்தார். நம் பாராளுமன்றம் இன்னும் சிறப்பாக செயல்பட 3 புதுமையான ஐடியாக்களை மாணவர்கள் தரவேண்டும் என்பதே அது. ஆனால், ‘என்னிடமே இதற்கு பதில் இல்லாதபோது, எப்படி மாணவர்களிடம் பதில் கேட்பது?’ என்று வருந்தினார் கலாம். அடுத்த 1 மணிநேரம் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த ஆரோக்கியமான விவாதத்தை எங்களுடைய அடுத்த புத்தகமான ‘அட்வான்ட்டேஜ் இந்தியா’வில் சேர்க்கலாம் என பேசிக்கொண்டோம்.

மூன்றாவது. இங்குதான் கலாம்-ன் உண்மையான, அழகான மனதை தெரிந்துகொண்டேன். ஆறேழு கார்கள் கொண்ட அணிவகுப்பில், 2வது காரில் நாங்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்பு, ஒரு ஜிப்ஸியில் 3 பாதுகாப்பு வீரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் பாதுகாப்புக்காக ஜிப்ஸி மேல் துப்பாக்கியுடன் நின்று கொண்டு வந்தார். ஒருமணிநேரம் இருக்கும். ‘ஏன் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். சோர்வடைந்துவிடுவாரல்லவா? பார்ப்பதற்கு ஏதோ தண்டனைக்காக நிற்பதுபோல் இருக்கிறது. உடனே அவருக்கு வயர்லெஸ்ஸில் அவரை அமரச் சொல்லி தகவல் அனுப்புங்களேன்’ என்றார் கலாம். பாதுகாப்புக்காக அவர் நிற்கக்கூடும் என்று கலாமை சமாதானப்படுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. எனவே, ரேடியோ மூலம் தகவல் அனுப்பினோம். அது வேலையும் செய்யவில்லை. அடுத்த ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மூன்று முறை அவரை அமரச்சொல்லுமாறு கை சைகை கொடுக்கச் சொல்லி என்னிடம் நினைவூட்டினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, ‘நான் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்’ என்றார்.

ஷில்லாங் சென்றவுடன் அந்த பாதுகாப்பு வீரரைக் கண்டுபிடித்து கலாமிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் கலாம் அந்தப் பாதுகாப்பு வீரரை வரவேற்று வாழ்த்தினார். கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என்னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். கலாம் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார்.

பின்னர், லெக்சர் அறைக்கு சென்றோம். ‘எப்போதும் மாணவர்களைக் காக்கவைக்ககூடாது!’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். எனவே, அவருடைய மைக்கை உடனடியாக செட் செய்து கொடுத்து, லெக்சர் குறித்து விளக்கினேன். மைக் செட் செய்யும்போது ‘Funny guy! Are you doing well?” என்றார் கலாம். அவர் ‘Funny guy’ என்று சொன்னால் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவர் சொல்லிய விதத்தைப் பொறுத்து அர்த்தங்கள் மாறுபடும். நாம் நன்றாக இயங்கினாலோ, ஏதாவது சொதப்பிவிட்டாலோ என பல தருணங்களுக்கும் இதைச் சொல்வார் கலாம். இல்லாவிட்டால் சும்மா ஜாலிக்காகவும் சொல்வார். அவருடன் இருந்த 6 வருடங்களில் ‘Funny Guy’ என்ற அவருடைய வார்த்தை பிரயோகத்தை நான் முழுவதும் புரிந்துவைத்திருந்தேன். ஆனால், இதுதான் இறுதி முறை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.

"Funny guy! Are you doing well?” என்றார் ‘ஆம்’ என்றேன். அவைதான் கலாம் என்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள்.

மேடைப் பேச்சில் 2 நிமிடங்கள் பேசியிருப்பார். ஒரு வாக்கியத்தை முடித்துவிட்டு, நீண்ட இடைவெளி விட்டார். நான் அவரைப் பார்த்தேன். மேடையில் இருந்து அப்படியே சரிந்தார்.

அவரை தூக்கி நிறுத்தினோம். மருத்துவர் ஓடி வந்தார். எல்லா விதத்திலும் முயற்சித்தோம். அவருடையை கடைசி தருணத்தை மறக்கவே முடியாது. முக்கால்வாசி கண்கள் மூடியிருந்த நிலையில் அவருடைய பார்வை இன்னும் நினைவில் உள்ளது. ஒருகையில் அவர் தலையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கை என் விரல்களைப் இறுக்கிப் பிடித்திருந்தன. அவர் முகத்தில் ஒரு பேரமைதி. அவர் கண்களில் இருந்து ஞானம் பிரகாசித்தது. அவர் ஒருவார்த்தை பேசவில்லை. அவர் வலியையும் வெளிக்காட்டவில்லை. அவர் வாழ்க்கையின் அர்த்தம் மட்டுமே எங்களுக்குப் புரிந்தது.

அடுத்த 5 நிமிடங்களில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து, கலாம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கடைசி தடவையாக அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் நண்பர் , என் வாழ்வின் வழிகாட்டி விடைபெற்றுவிட்டார். என் நினைவுகளிலும், அடுத்த பிறப்பிலும் உங்களை மீண்டும் சந்திப்பேன் சார்!

இப்போது என் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன.

'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’ என்று அடிக்கடி என்னைக் கேட்பார். நானும் ஒவ்வொரு முறையும் அவரைக் கவர்வதற்காக வித்தியாசமான பதில்களைக் கண்டுபிடிப்பேன். ஒருநாள் பொறுமையிழந்து அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இந்தியா 2020….சொல்லுங்கள்!’ என்றேன்.

'ஆசிரியர்’ என்றார் கலாம்.

2 வாரங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,’பிள்ளைகள்தான் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டும். சில சமயங்களில் அப்படி நடக்காதது வருத்தமாக இருக்கிறது’. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, ‘2 விஷயங்கள் அனைத்து பெரியோர்களுக்கும். எப்போதும் உங்கள் இறுதிப் படுக்கையில் பணத்தை விட்டுச் செல்லாதீர்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும். இரண்டாவது. வாழ்வின் முடிவில் தான் நினைத்த வேலையைச் செய்துகொண்டே மரணிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நம் கடைசி தருணங்கள் டக்கென்று முடிந்துவிடவேண்டும்' என்றார்.

இன்று, அவர் விரும்பியதை செய்தபடியே இறுதிப் பயணதை மேற்கொண்டிருக்கிறார். கற்பித்தல். இதற்காகத்தான் தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று விரும்பினார் கலாம். அவருடைய கடைசி தருணத்தில், அவருக்குப் பிடித்தவாறு, மேடையில் கற்பித்துக்கொண்டே மறைந்துவிட்டார் கலாம். ஒரு மகத்தான ஆசிரியராக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவருடைய வங்கிகணக்கில் ஒன்றுமில்லை. நமக்கான வாழ்த்துக்களும், மக்களுக்கான காதலும் மட்டுமே அவர் விட்டுச்சென்ற சொத்துகள். வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டார் அப்துல் கலாம்.

உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட தருணங்கள், உங்களுடைய தன்னடக்கம், எதையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஆர்வம் இனி எனக்கு தரிசிக்கக் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்ந்த விதத்திலும், வார்த்தைகளிலும் நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தீர்கள். நாம் விமானத்தைப் பிடிக்க விரைந்த தருணங்கள், நம் பயணங்கள், நம் விவாதங்கள் இனி நினைவுகள்தான். எனக்கு கனவுகள் கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் இல்லை. ஆனால், கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது! "

உங்கள் மாணவன்,

ஶ்ரீஜன் பால் சிங்
கற்றுக்கொள்வோம் கலாம்!

ஜனாதிபதியின் கடிதம் – சுஜாதா

Kalam by Ma Se
முதலில் ராஜ் பவனிலிருந்து போன் வந்தது. என் விலாசம் சரிதானா என்று விசாரித்தார்கள். அதன்பின் அதிகாரிகள் வந்தனர். அழகான மலர்க்கொத்துடன் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த கடிதத்தைக் கொடுத்தனர். எனக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதாகவும் இறைவன் அருளால் சீக்கிரமே குணமாக வேண்டும் என்று எழுதியிருந்தார்.
FullSizeRender (93)
‘அப்துல் கலாம் உன் கிளாஸ்மேட் என்று ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறாய். எங்கே அதற்கு அத்தாட்சி ?’ என்று என்னை அடிக்கடி கேட்டவர்க்கெல்லாம் இதோ, அந்தக் கடிதம். அப்துல் கலாம் தன் நண்பர்களை மறக்கவில்லை என்பதும் அவருடைய எளிமையும் புரியும்.

Wednesday, 29 July 2015

Remembering APJ Abdul Kalam: Five stories on the Missile Man’s legacy

Remembering APJ Abdul Kalam: Five stories on the Missile Man’s legacy

APJ Abdul Kalam, the 'Missile Man' who redefined the Presidency, crafted a political idiom that spoke to children in a country growing young.

APJ Abdul Kalam, Abdul Kalam death, Kalam stories, Kalam inspiring stories, abdul Kalam news, APJ abdul Kalam news
APJ Abdul Kalam died on Monday, July 27 after suffering a cardiac arrest at IIM Shillong.
Former President A P J Abdul Kalam, the ‘missile man’ who became popular as ‘People’s President’ died today after he suffered a massive cardiac arrest and collapsed during a lecture at the IIM here this evening.
Kalam, who would have turned 84 in October, was confirmed dead more than two hours after he was wheeled into the ICU of Bethany hospital in a critical condition following the collapse at around 6.30 PM.
Here are five stories you must read on the life and times of A P J Abdul Kalam:
It was a setting that had defined his life, first as a scientist and then as India’s 11th President. It was also one that summed up his final moments. On the dais was Dr A P J Abdul Kalam, delivering the first lines of a lecture on sustainable development, to be followed by a trademark interaction with over 135 students from the Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM) in Shillong.
Watch video
But then, at around 6.30 pm, just as he had clicked past the first two slides, he collapsed — 75 minutes later, it was official. “All efforts were made but Dr A P J Abdul Kalam could not be revived,” the Bethany Hospital said in a statement.
Abdul Kalam, apj abdul kalam, apj abdul kalam died, death of apj abdul kalam, abdul kalam passes away, abdul kalam died, dr abdul kalam died, apj abdul kalam death, apj abdul kalam death news, abul kalam azad death, Former president Abdul Kalam passes away, sad news, former president of india apj abdul kalam, India News, National NewsAt around 6.30 pm, just as APJ Abdul Kalam had clicked past the first two slides, he collapsed — 75 minutes later, it was official.
“Tomorrow if I address a group of youngsters and talk about the flag flying in my heart and how I will uphold the dignity of the nation, I can get them to dream. But if I talk to people who are 40, 50 or 70 plus, it will not go down that well. Also, the youth have fewer biases about their society as compared to the grown-ups,” said Kalam.
abdul kalam, abdul kalam dies, shekhar gupta, indian express, kalam indian express“I believe every President before me contributed something in their respective fields — some in politics, some in education and others in social services,” said APJ Abdul Kalam. (Source: Express Archive)
Kalam was also instrumental in laying the foundation of the rocket launch systems at the Indian Space Research Organisation (ISRO) during a nearly two decade stint at ISRO from the late 1960s to 1982.
APJ Abdul Kalam, Abdul Kalam death, Kalam stories, Kalam inspiring stories, abdul Kalam news, APJ abdul Kalam newsDr. APJ Abdul Kalam with Pranab Mukherjee. (Source: PTI)
Known as the people’s President, he was the first occupant of the Rashtrapati Bhawan who connected to masses, particularly the youth, who accessed him via the internet.
APJ Abdul Kalam, Abdul Kalam death, Kalam stories, Kalam inspiring stories, abdul Kalam news, APJ abdul Kalam newsAPJ Abdul Kalam with students in Nagpur. He was always easily accessible to the youth. (Express Photo by: Shekhar Soni)
Kalam was one of the few young scientists sent by Dr Vikram Sarabhai for training of ‘sounding rockets’ at the National Aeronautics Space Agency in the US. When he reached Thumba in 1964, Kalam had little to fall back on. He had converted a cattle shed at this coast into a laboratory to work on sounding rockets.
- See more at: http://indianexpress.com/article/india/india-others/former-president-abdul-kalam-passed-away-following-sudden-illness/#sthash.0XjWerkX.dpuf