முதலில் ராஜ் பவனிலிருந்து போன் வந்தது. என் விலாசம் சரிதானா என்று விசாரித்தார்கள். அதன்பின் அதிகாரிகள் வந்தனர். அழகான மலர்க்கொத்துடன் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த கடிதத்தைக் கொடுத்தனர். எனக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதாகவும் இறைவன் அருளால் சீக்கிரமே குணமாக வேண்டும் என்று எழுதியிருந்தார்.
‘அப்துல் கலாம் உன் கிளாஸ்மேட் என்று ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறாய். எங்கே அதற்கு அத்தாட்சி ?’ என்று என்னை அடிக்கடி கேட்டவர்க்கெல்லாம் இதோ, அந்தக் கடிதம். அப்துல் கலாம் தன் நண்பர்களை மறக்கவில்லை என்பதும் அவருடைய எளிமையும் புரியும்.
Post a Comment